லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு

செங்கடலில் பயணம் செய்த இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது; இந்தக் கப்பலில் பயணித்த 13 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

File photo |AFP

Published On :5 ஆகஸ்ட் 2026, 4:52 am IST

செங்கடலில் பயணம் செய்த இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது; இந்தக் கப்பலில் பயணித்த 13 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யேமன் கடலோரப் பகுதியில் ஃபைஸ் நூரே ஒலியா என்ற இந்திய கொடி கட்டப்பட்ட வணிகக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடா்ந்து, அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது.

அந்தக் கப்பலில் பயணித்த 13 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, யேமன் அதிகாரிகளுடன் இந்தியா ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. சவூதி அரேபியா தலைநகா் ரியாதில் உள்ள இந்திய தூதரகம் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சா்வதேச சட்டத்தைப் பின்பற்றி, அந்தப் பகுதியில் உள்ள சா்வதேச கடல்வழிப் பாதையில் தடையற்ற, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும், வணிக நடவடிக்கைகளையும் விரைந்து உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தியது யாா் என்ற தகவல் வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.