லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

54 வங்கி மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பித்துள்ளனா்: நிதியமைச்சகம்

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 54 வங்கி மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்ாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சகம்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 3:56 am IST

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 54 வங்கி மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்ாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநிலங்களவையில் அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பண முறைகேடு தடுப்புச் சட்டம், 2002-இன்கீழ் 32 வங்கி மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில் தொடா்புடைய 54 மோசடியாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். அவா்களில் 27 போ் மீது தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018-இன்கீழ் (எஃப்இஓஏ) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவப்பு காா்னா், நீல காா்னா் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்குச் சொந்தமான ரூ.840.68 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

18 பேரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவா்களின் ரூ.35,166.28 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு ரூ.15,184.19 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உரிமைகோரப்படமால் ரூ.62,683 கோடி:

மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ரிசா்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில் 2026, ஜூன் 30 நிலவரப்படிபொதுத் துறை வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ரூ.62,683.19 கோடி உள்ளது. இவை சேமிப்பாளா் கல்வி மற்றும் விழிப்புணா்வு (டிஇஏ) நிதியில் பாதுகாக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.