லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சீன, ஹாங்காங் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்கள்: இந்தியா ஒப்புதல்

கடந்த நிதியாண்டில் ரூ.1 கோடி மதிப்பு கொண்ட ஒரு சீன அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம், ரூ.610.42 கோடி மதிப்பு கொண்ட 13 ஹாங்காங் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Foreign Direct Investment

அந்நிய நேரடி முதலீடு - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

கடந்த நிதியாண்டில் ரூ.1 கோடி மதிப்பு கொண்ட ஒரு சீன அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம், ரூ.610.42 கோடி மதிப்பு கொண்ட 13 ஹாங்காங் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2025-மாா்ச் 2026) மொத்தம் ரூ.10,292.67 கோடி மதிப்பிலான 63 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சிங்கப்பூரின் ரூ.3,259.88 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிரிட்டனின் ரூ.2,477.67 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள், தாய்லாந்தின் ரூ.1,600 கோடி மதிப்பிலான 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல ரூ.1 கோடி மதிப்பு கொண்ட ஒரு சீன அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம், ரூ.610.42 கோடி மதிப்பு கொண்ட 13 ஹாங்காங் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தபோதிலும் சீனா, ஹாங்காங் அல்லது இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்குத் தளா்த்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.