மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, 152 தொகுதிகளுக்குஏப்ரல் 23-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கும், இன்று (ஏப். 29) வாக்குப் பதிவு நடந்தது. முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கும் இன்றுதான் தேர்தல் நடந்தது.
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்...
பி- மார்க் கருத்துக் கணிப்பின்படி,
பாஜக 150 - 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 - 138 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கிறது.
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பின்படி,
பாஜக 146 - 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 - 140 இடங்களையும், மற்ற 6 - 10 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கிறது.
போல் டைரி கருத்துக் கணிப்பின்படி,
பாஜக 142 - 171 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 99 - 127 இடங்களையும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றும் என தெரிவிக்கிறது.
ஜேவிசி டைம்ஸ் நவ்
பாஜக 138 - 159 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 131 - 152 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றும் என தெரிவிக்கிறது.
ஏபிபி (ABP)
பாஜக 146 - 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 - 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கிறது.
சிஎன்என் - நியூஸ் 18
பாஜக 147 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 141 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம், கேரளம், புதுவையில் ஏப். 9-ல் நடந்து முடிந்தது. ஏப். 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலும் முடிந்து, 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்று முடிந்ததும் கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன.
ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படியே இருக்கும் என்பது உறுதியில்லை. இதுவரை அப்படியே நடந்ததும் இல்லை என்பதுதான் வரலாறு.
Summary
Exit Poll Result 2026: Who's winning West Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் வரலாறு படைக்கும் பாஜக! முதல்முறையாக ஆட்சியமைக்கிறது!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

மேற்கு வங்கத்தை சிதைத்து அடையாளத்தை மாற்ற நினைக்கும் பாஜக! திரிணமூல்
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

