மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி

பெங்களூரில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலி

News image

பெங்களூரில் கடும் மழை - விடியோ க்ளிப்

Updated On :29 ஏப்ரல் 2026, 8:29 pm IST

பெங்களூரில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

பெங்களூரில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓரிரு மணிநேரம் மட்டுமே நீடித்த பலத்த காற்று மற்றும் கனமழையால் பெங்களூரின் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

இந்த நிலையில், கனமழையின்போது சிவாஜிநகரில் பௌரிங் மருத்துவமனையின் 8 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டிய நடைபாதையில் இருந்த வியாபாரிகள் உள்பட மக்கள் மீது சுவர் விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தத நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரில் கடும் மழை

பெங்களூரில் கடும் மழை - PTI

இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்த மாநில முதல்வர் சித்தராமையா, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெங்களூரில் ஓரிரு மணிநேரம் மட்டும் நீடித்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, ஆலங்கட்டி மழையின் காரணமாக சில பகுதிகளில் பனியும் பொழிந்தது. மேலும், மழை, காற்று காரணமாக சில பகுதிகளில் குறைந்தது 50 மரங்கள் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு உள்பட மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக் குழுக்களும், போக்குவரத்து காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெங்களூரில் அடுத்த 12 முதல் 36 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்புகள் நிலையற்றதாகவே உள்ளன. மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Summary

7 Dead After Hospital Compound Wall Collapses During Heavy Rain In Bengaluru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.