மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறதா தவெக?

தமிழகத்தில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெறும் என தனியார் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தகவல்...

News image

தவெக தலைவர் விஜய் - X

Updated On :29 ஏப்ரல் 2026, 8:12 pm IST

தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஆட்சி அமைவதாக இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 அன்று நடைபெற்றது. ஆளும் திமுக கூட்டணி, அதிமுக, நாதக மற்றும் தவெக தலைமையில் நான்கு முனைப் போட்டி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதன்கிழமை (ஏப். 29) மாலை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கான முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் 98 - 120 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஆளும் திமுக கூட்டணி 92 - 110 இடங்களையும், அதிமுக கூட்டணி 22 முதல் 23 இடங்களையும் கைப்பற்றும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மேட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு 13 முதல் 18 இடங்கள், என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு 18 - 24 இடங்கள், ஜேவிசி - டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அக்கட்சி 8 - 15 இடங்களைக் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

An opinion poll conducted by India Today–Axis My India indicates that a government led by the TVK will be formed in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.