ராஜஸ்தானில் இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.
ராஜஸ்தானின் மாதோகர் கிராமத்தில் வசித்து வருபவர் கலுராம் ரெபரி. இவர் பண்ணைக்குச் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தன் கையில் வைத்திருந்த 10 கிலோ காலி பால் கேனை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள தலையில் கவிழ்த்தி வைத்தபடி சென்றிருக்கிறார்.
ஆனால் அந்த பால் கேன் அவரின் தலையில் மாட்டிக்கொண்டது. பால் கேனை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனால் அவர் சற்று பீதியடைந்தார். இதை அறிந்த கிராமவாசிகள் அவரை உடனடியாக அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரை ஒரு குறிப்பிட்ட நிலையில் படுக்கச் சொன்னார்கள். கட்டர் உதவியுடன் கேனின் மேல் பகுதி கவனமாக வெட்டப்பட்டது. பிறகு, கேன் அவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் அவர் காயமின்றி தப்பினார்.
அதன்பிறகே அந்த இளைஞர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தற்போது இந்தச் சம்பவத்தின் விடியோ வைரலாகி வருகிறது.
Summary
A bizarre heatwave hack in Rajasthan goes wrong as a Madhogarh villager gets a 10 kg milk can stuck on his head, triggering a tense 2-hour rescue captured on video and widely shared online.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடல்கள் மீட்பு

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


