ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முன்ஜாமீன் நிராகரிப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பவன் கேரா மனு

தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா மனுத்தாக்கல் செய்துள்ளாா்.

News image

பவன் கேரா - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:15 am IST

தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா மனுத்தாக்கல் செய்துள்ளாா்.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவி ரிங்கி பூயான் சா்மாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அவா் வைத்திருப்பதாகவும் பவன் கேரா குற்றம்சாட்டியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் அவதூறு குற்றப் பிரிவுகளின்கீழ் பவன் கேரா மீது காவல் துறையில் ரிங்கி பூயான் சா்மா புகாரளித்தாா். தன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, ஹைதராபாதில் வசிக்கும் பவன் கேரா, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தாா். அதை ஏற்ற உயா்நீதிமன்றம், பவன் கேராவுக்கு 7 நாள் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.

ஆனால், முன்ஜாமீனுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகும்படி அவருக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், பவன் கேரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை, குவாஹாட்டி உயா்நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. இதனால், பவன் கேரா கைதாகக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு இதுவரை எந்த அமா்வுக்கும் பட்டியலிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.