பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி.க்களும் பஞ்சாப் மக்களுக்கு துரோகமிழைத்திருப்பதாக மாநில நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆத் ஆத்மியை சேர்ந்த 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தது குறித்து பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா பேசியதாவது, "ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்றால், அதற்கான அறிகுறிகள் முன்பே தோன்றி விடும்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக பாஜக பொய்யான வழக்கை தொடர்ந்தபோது, ராகவ் சத்தா எதுவும் பேசவில்லை. அரவிந்த் கேஜரிவாலை நீதிமன்றம் விடுவித்தபோதும், ராகவ் சத்தா பேசவில்லை.
அப்போதே அவரின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கி விட்டார். பஞ்சாப் மக்கள் அவருக்கு அளித்த மரியாதையை அவர் மறந்து விட்டார். அவர் கட்சிக்கு மட்டுமின்றி, பஞ்சாப் மக்களுக்கும் துரோகமிழைத்துள்ளார்.
பாஜக, சில நாள்களுக்கு மட்டுமே ஒருவரை அமைச்சராக வைத்திருக்கும். பின்னர், அவரை சாதாரண பணியாளராக மாற்றி விடும்" என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் ஆகிய மூவரும் பாஜகவில் இணைந்த நிலையில், ஸ்வாதி மாலிவால், ஹா்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சைனி ஆகியோரும் பாஜகவில் இணைகின்றனர்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அதில் 3-இல் 2 பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Summary
MPs Resigned! The BJP will make you a minister for a few days, and then turn you into a guard again, says Harpal Singh Cheema
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் -ராகவ் சத்தா இடையே தொடா்பு இருப்பதாக பாஜக வதந்தி: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
