தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா

19 மாநில முதல்வர்களும் ஒரே மாநிலத்தில் ஒரு கட்சிக்கு எதிராகப் பிரசாரம் - மமதா

News image

பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்தில் பிரசாரம் - PTI

Updated On :25 ஏப்ரல் 2026, 8:20 pm IST

கொல்கத்தா : ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் 19 மாநில முதல்வர்களும் ஒரே மாநிலத்தில் ஒரு கட்சிக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டும் அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக வரும் ஏப். 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, கொளுத்தும் வெய்யிலிலும் பிரசாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், ஹூக்ளி மாவட்டத்தில் உத்தர்பாறா பகுதியில் இன்று(ஏப். 25) நடைபெற்ற பிரசாரத்தில் மமதா பேசியதாவது :

“மேற்கு வங்கத்தை நோக்கி 50 ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன; பிரதமர் தொடங்கி உள்துறை, ரயில்வே, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் வரை ஏறத்தாழ ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் 19 மாநில முதல்வர்களும் ஒரே மாநிலத்தில், அதாவது மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், வங்கம் எங்கிலும் திரிணமூல் காங்கிரஸ் பிரசாரத்துக்காக 3 ஹெலிகாப்டர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது! பாஜக மிகத் தீவிரமாக இருக்கிறதென்று.

ஆனால், மேற்கண்ட எல்லாவித முன்னெடுப்பும் சத்தமும் தீவிரமும் எல்லாமே மே 4-ஆம் தேதி அழுகையில் போய் முடியும்.”

பிரசரத்தில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது குறிப்பிட்ட, “திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் தேர்தல் முடிவுகளுக்குப்பின் தலைகீழாகத் தொங்க விடப்படுவர்” என்னும் கருத்தை குறிப்பிட்டுப் பேசிய மமதா, “ஒரு மத்திய அமைச்சராகவும் ஒரு பொறுப்பான தலைவராகவும் இத்தகைய சொற்களை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. பயங்கரவாதத் தொனியில் நீங்கள் பேசுகிறீர்கள்.

ஆனால், உங்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் பாயாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், எங்கள் ஆள்களிடம் அவரது பேச்சை காணொலிகளாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கேட்டுகொண்டேன்.

பிரசாரத்தில் பிரதமர் மோடி செய்வதையெல்லாம் பார்த்தால், அவர் ஏற்கெனவே திரைக்கதை தயாரித்து கேமிராக்களை ஆங்காங்கே வைத்து படம்பிடித்து அதனைத்தொடர்ந்து, யதார்த்தமாக அவர் நடந்துகொள்வதைப் போல நமக்கு காட்டிக்கொள்கிறார்கள்” என்றார்.

Summary

TMC chief Mamata Banerjee on Saturday claimed that the BJP has deployed its entire machinery to defeat the regional party in the West Bengal assembly elections as almost the entire Union cabinet and CMs of NDA-ruled states are camping in the poll-bound state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.