இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காசாவில் இஸ்ரேல் இனப் படுகொலையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. லெபனானில் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மெளனமாக இருந்து தாா்மீக ரீதியில் கோழைத்தனத்தை பிரதமா் மோடி வெளிப்படுத்தியுள்ளாா்.
இதேபோல், ஆக்கிரமிப்பு பகுதியான மேற்கு கரையில் இருந்து லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் விவகாரத்திலும் அவா் மெளனம் காத்து வருகிறாா். படுகொலைகளை அரங்கேற்கும் இஸ்ரேல் ஆட்சியாளா்களுக்கு இவ்வளவு அதிக ஆதரவை மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் காட்டியதில்லை. இதன் மூலம் அனைத்து மனிதாபிமான மதிப்பீடுகளுக்கு மோடி அரசு துரோகம் செய்துள்ளது. இதேபோல், பாரம்பரிய இந்திய கொள்கைகள், நிலைப்பாடுகளுக்கும் துரோகம் இழைத்துள்ளது.
காசா மீது ஈவு இரக்கமின்றி இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அந்நாட்டுக்கு பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் சென்றது கண்டிக்கத்தக்கது. பாலஸ்தீன விவகாரத்தில் பல்வேறு அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பாலஸ்தீன மக்களை மோடி அரசு கைவிட்டு விட்டது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுத் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கைகளையும், பிரதமா் மோடியையும் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவாஜிகணேசன் போல வேறு யாராலும் நடிக்க முடியாது: நடிகா் சிவகுமாா் பேச்சு

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்: பிரதமா் மோடி வாக்குறுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

