பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்ததோடு, அந்தக் கொடூரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இந்திய மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே பரபரப்பாக்கியது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஓர் ஆண்டான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:
“பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளில், ஓராண்டுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் 27 உறுப்பு நாடுகளும் இந்திய மக்களுடன் ஒற்றுமையாக நிற்கின்றன.
அவர்களுடைய குடும்பத்தினருடனும் இந்திய அதிகாரிகளுடனும் இணைந்து, நாங்கள் அவர்களின் நினைவைப் போற்றுகிறோம். ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Summary
The European Union condemned the Pahalgam terrorist attack and expressed its support to the people of India on the first anniversary of that horrific incident.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த பயங்கரவாதத்திற்கும் நாடு அடிபணியாது: ஹரியாணா முதல்வர்!

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!

பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - கண்ணீருடன் குடும்பத்தினர்!

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


