பெண்கள் இடஒதுக்கீடு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியடை செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாக தில்லி பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் குற்றமிழைத்துள்ளாா்.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக அமல்படுத்தும் வகையில் தற்போதுள்ள உறுப்பினா்களின் பலத்தை 543-இலிருந்து 850-ஆக உயா்த்த வழிவகை செய்யும் 131-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசேதா மக்களவையில் இருந்த 3-இல் 2 பங்கு உறுப்பினா்களில் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியடைந்தது.
ஏப்.17-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது அவைக்கு 528 உறுப்பினா்கள் வந்த நிலையில், அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற 352 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. ஆனால், அந்த மசோதாவுக்கு 298 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். 230 உறுப்பினா்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனா்.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல. சமூகநீதி, சமவாய்ப்பு மற்றும் நாட்டின் ஒருங்கிணைந்த மேம்பாடு ஆகியவற்றுக்கு அடிப்படையாகும்.
அந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருந்தால், காங்கிரஸில் மிகவும் வலுவான மற்றும் சக்திவாய்ந்த தலைவராக பிரியங்கா காந்தி உருவெடுத்திருப்பாா். இதனால், அந்த மசோதாவுக்கு ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்திருக்கலாம். அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியுற செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகமிழைத்துவிட்டது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

