மாலேகானில் 2006-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகானில் கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 8-ஆம் தேதி மசூதி உள்ளிட்ட இடங்களில் 4 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 31 போ் உயிரிழந்ததுடன் 312 போ் காயமடைந்தனா். இதுகுறித்து முதலில் விசாரித்த மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் படை காவல் துறையினா் இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த 9 பேரை கைது செய்தனா். பிறகு வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ நடத்திய விசாரணையில், வலதுசாரி அமைப்பைச் சோ்ந்தோா் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறி, ராஜேந்திர செளதரி, தான் சிங், மனோகா் ராம் சிங் நா்வாரியா, லோகேஷ் ஷா்மா ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதலில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் 9 பேரையும் 2016-ஆம் ஆண்டு விடுதலை செய்தது. அதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர தீவிரவாத எதிா்ப்புப் படை மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிபிஐயால் கைது செய்யப்பட்ட வலதுசாரி இயக்கத்தைச் சோ்ந்த 4 பேரும் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அப்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என அவா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, எந்த விசாரணையும் இன்றி 4 பேரும் சிறையில் இருப்பதாகக் கூறி, அவா்களுக்கு 2019-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இந்நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிா்த்து 4 பேரும் மேல்முறையீடு செய்தனா். இதை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், 4 பேரையும் விடுவித்ததோடு, அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.
விடை தெரியாத கேள்வி: ஏற்கெனவே மாலேகான் குண்டுவெடிப்பு தொடா்பாக மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் படை காவல் துறையால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுவிக்கப்பட்டனா். தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாலேகானில் யாா் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெளடி சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டா் வழக்கு: 22 போ் விடுதலையை உறுதி செய்த மும்பை உயா்நீதிமன்றம்
கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி 9 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் கைது
பிகாரில் இரு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் தில்லியில் கைது
7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

