குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று(ஏப். 19) காலை இலங்கை புறப்பட்டார்.
குடியரசு துணைத் தலைவரான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதாலும், அவர் தமிழ்நாட்டைச் சோ்ந்தவர் என்பதாலும் இந்தப் பயணம் இரு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கைப் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு நாள்களிலும், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் நாள் அலுவலிலேயே (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமா் ஹரிணி அமர சூரிய ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் குடியரசு துணைத் தலைவர் சந்திக்கவுள்ளார்.
இத்தகைய உயர்நிலை சந்திப்புகள் நீங்கலாக, தனது பயணத்தின்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களையும் இந்திய குடியரசு துணைத் தலைவர் சந்திக்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Summary
Vice President C.P. Radhakrishnan departed for Sri Lanka this morning (April 19) on a two-day official visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

இந்த வாரம் கலாரசிகன் - 26-04-2026

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

