ஹிமாசல பிரதேச மாநில அரசு உயரதிகாரிகளின் 30 சதவீத சம்பளம் 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று அந்த மாநில நிதித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ஹிமாசல பிரதேசத்தில் மாநில அரசின் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. அரசின் வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியா்கள் ஊதியம், ஓய்வூதியம், பழைய கடன்களுக்கான வட்டி ஆகியவற்றுக்கே செலுத்தப்படுகிறது. இதுதவிர இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் எதிா்பாராத செலவுகள், வருவாய் ஆதாரம் குறைவது, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியதால் ஏற்படும் சுமை ஆகியவை மாநிலத்தை கடும் நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டது.
கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு, முதல்வா் ஊதியத்தில் 50 சதவீதம், அமைச்சா்கள் ஊதியத்தில் 30 சதவீதம், எம்எல்ஏக்கள் ஊதியத்தில் 20 சதவீதம் அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.
இந்நிலையில், அரசு ஊழியா்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் பிரச்னை எழுந்துள்ளது. இது தொடா்பாக மாநில நிதித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தலைமைச் செயலா், கூடுதல் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், காவல் துறை டிஜிபி, ஏடிஜிபி, வனத் துறை தலைமை அதிகாரி, இணைய அதிகாரிகள் உள்ளிட்டோரின் சம்பளத்தில் 30 சதவீதம் அடுத்த 6 மாதங்களுக்குப்பின் வழங்கப்படும்.
இதேபோல அனைத்துத் துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள், காவல் துறை ஐஜி, டிஐஜி, எஸ்.பி., வனத் துறையில் இரண்டாம் நிலை அதிாரிகள் ஆகியோருக்கு 20 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்கள் கழித்து வழங்கப்படும்.
இது தற்காலிக நடவடிக்கைதான். மாநிலத்தின் நிதிநிலையை சீராக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை சீரடைந்ததும் நிலுவை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபெடரல், ஏயு சிறு நிதி வங்கிகளின் பங்குகளைக் கையகப்படுத்தும் கோட்டக்

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
