மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா பற்றி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்ற வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இரு மசோதாக்களுக்கும் 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா நிறைவேற்றம் மக்களவையில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இதுபற்றி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, “பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா எனக் கூறப்படும் மசோதா, தொகுதி மறுவரையறை மற்றும் தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இணைக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கான இடஒதுக்கீடு தான் உண்மையான நோக்கமாக இருந்திருந்தால் அதற்கு சிறிய திருத்த மசோதா மட்டுமே தேவைப்பட்டிருக்கும்.
2024 தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்ல நினைத்தது அரசியலமைப்பைத் திருத்துவதற்காக நாடாளுமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு இடத்தை வசப்படுத்தவும் அம்பேத்கரின் இடஒதுக்கீடு உத்தரவாதங்களை நீக்குவதற்கு மட்டுமே. அதனால், மக்கள் மோடிக்கு 240 தொகுதிகள் மட்டுமே கொடுத்தனர், 400 அல்ல. நேற்று அவர்களின் நோக்கங்கள் மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
பிரதமர் மோடியை புராண கதாபாத்திரமான பீமனுடன் ஒப்பிட்டுப் பேசிய ரேவந்த் ரெட்டி, மக்கள் ஹனுமனைப் போன்று தங்களது வாலை பீமன் (மோடி) முன் நீட்டினர். பீமனால் அதைத் தூக்க முடியவில்லை. அதேபோல, மோடிஜியின் அகந்தை நேற்று தோற்றுவிட்டது” என்றார்.
மேலும், “இன்று கேரளத்தில் 20 தொகுதிகள் உள்ளன. உ.பி.யில் 80 உள்ளன. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 60. இதனை 50% அதிகப்படுத்தினால் கேரளத்தில் 30 தொகுதிகளாக உயரும். உ.பி.யில் 120 தொகுதிகளாக உயரும். இரண்டுக்கும் வித்தியாசம் 90 ஆக இருக்கும். சதவீதம் ஒரே மாதிரி தெரிந்தாலும் எண்ணிக்கையின்படி யதார்த்தம் வேறு மாதிரி இருக்கும்.
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக பாஜக கூறுகின்றது. தொகுதி மறுவரையறை அல்லது தொகுதி எண்ணிக்கை அதிகரித்தலுடன் இணைக்காமல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைவருகிற திங்களன்று பாஜக கொண்டுவந்தால் அதனை நிறைவேற்ற இந்தியா கூட்டணி வாக்களிக்கும்.
சுதந்திரத்தின் போது காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. பெண்களை மிக உயர்ந்த அரசுப் பதவிகளில் அமர்த்தியது. ராஜீவ் காந்தியின் ஆட்சியில் கீழ் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
1980-ல் பாஜக நிறுவப்பட்டதிலிருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பாஜகவின் தேசியத் தலைவராகவோ அல்லது பொதுச் செயலாளராகவோ ஒரு பெண் கூட பணியாற்றியதில்லை.
காங்கிரஸை நீங்கள் அவதூறு செய்யாதீர்கள். 140 கோடி மக்கள் உங்கள் அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை முதலில் நாடு, பிறகு மக்கள், அதன் பிறகுதான் கட்சி. இந்த நாட்டை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் தோற்கடிப்போம்” என்று தெரிவித்தார்.
Summary
Modi's ego Defeated: Revanth Reddy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


