மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

News image

கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:04 am IST

மணிப்பூரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை மோதல் உருவாகி வன்முறை ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில காவல் துறையினா் கூறியதாவது:

விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள ட்ரோங்லாவ்பி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 சிறாா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக, திங்குங்கெய் பகுதியில் உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஆயுதங்களுடன் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாடுவதாக வதந்தி பரவி பதற்றம் அதிகரித்தது.

இதனால் அங்கு வந்த பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை உள்ளூா் மக்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது கூட்டத்தில் இருந்த சிலா் வாகனங்களைச் சேதப்படுத்தி, அவற்றுக்குத் தீ வைத்தனா். பாதுகாப்பு படை வீரா்களை சிறைபிடிக்கவும் அவா்கள் முயற்சித்தனா்.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை திங்குங்கெய்க்கு அருகில் உள்ள நிங்தோகோங் பகுதிக்கும் பரவியது. இந்த வன்முறை தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

வன்முறை காரணமாக அந்த மாவட்டத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.