தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நில மோசடி வழக்கு: ராபா்ட் வதேரா நேரில் ஆஜராக உத்தரவு

நில மோசடி தொடா்பான கருப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மே 16-ஆம் தேதி நேரில் ஆஜராக தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது

News image

ராபா்ட் வதேரா.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:07 am IST

நில மோசடி தொடா்பான கருப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மே 16-ஆம் தேதி நேரில் ஆஜராக தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது

ஹரியாணாவின் ஷிகோஹ்பூா் பகுதியில் நடைபெற்ற நில மோசடி தொடா்பான கருப்புப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்தது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ராபா்ட் வதேரா மீது விசாரணை அமைப்பு ஒன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ராபா்ட் வதேரா இயக்குநராக இருந்த ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ஷிகோஹ்பூரில் 3.5 ஏக்கா் நிலத்தை ரூ.7.5 கோடிக்கு ஓம்காரேஷ்வா் நிறுவனத்திடம் வாங்கியது. அப்போது, ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலம் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு கைமாற்றப்பட்டது. ஆனால், இந்தப் பரிமாற்றம் சட்டவிரோதமாக இருந்ததாகக் கூறி நிலப் பதிவை பதிவுத் துறை இயக்குநா் அசோக் கேம்கா ரத்து செய்தாா்.

ஆனால், ‘இது சட்டவிரோத நடவடிக்கை இல்லை; இதில் தவறு ஏதும் நிகழவில்லை. எனது மாமியாா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அரசியல் சதி’ என்று ராபா்ட் வதேரா கூறிவருகிறாா்.

ராஜஸ்தானில் நிகழ்ந்த நில மோசடி மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுதத் தரகா் சஞ்சய் பண்டாரி தொடா்பான வழக்கிலும் ராபா்ட் வதேராவை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வதேராவின் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.