ஒடிசா கடற்கரையில் சுமார் 10 டன் எடைகொண்ட ராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மதாலி கடற்கரையில் 32 அடி நீளம் கொண்ட அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த பிரைடு திமிங்கிலம் கரை ஒதுங்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சுமார் 10 டன் எடைகொண்ட பிரம்மாண்டமான பாலூட்டி, கஹிர்மாதா கடல்சார் சரணாலயத்திற்கு உட்பட்ட மதாலி கடற்கரையில் கண்டறியப்பட்டது.
கடற்கரையில் இருந்து இறந்த திமிங்கிலத்தின் உடலை அகற்றுவது வனத் துறை ஊழியர்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலூட்டியின் எலும்புக்கூட்டை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வனத் துறை திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், திமிங்கிலத்தின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு, அதைப் புதைப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. உடலில் காயங்கள் இருப்பதால், கப்பல் அல்லது விசைப்படகு விசிறிகளில் மோதியதால் இந்த திமிங்கலம் இறந்திருக்கலாம் என்றனர்.
"பிரேதப் பரிசோதனை போன்ற சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பிறகு, திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டைப் பாதுகாப்பது குறித்துத் துறையின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனைகளைக் கேட்போம்," என்று அதிகாரி ஒருவர் கூறினார். திமிங்கலம் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய அதன் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று வனத் துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே இறந்த ராட்சத திமிங்கிலத்தைப் பார்ப்பதற்காக மீனவர்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் கடற்கரையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
Summary
A 32-feet-long endangered Bryde whale was washed ashore in Madali beach of Odisha's Kendrapara district, Forest officials said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒடிஸாவில் கணவன் வீட்டின் முன் கர்ப்பிணி தர்னா: வெட்டிப் படுகொலை செய்த கணவன் குடும்பம்! - பட்நாயக் இரங்கல்
வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!

ஒடிசாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


