மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மத்திய அரசின் தலையீடு மற்றும் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் தேர்தல் மத்திய அரசின் தலையீடு இன்றி நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து, திரிணமூல் காங்கிரஸின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மாநிலத்தில் தேர்தல் செயல்முறை சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.
தேர்தல், தில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டதாக, அரசியல் சார்பற்ற, பாரபட்சமின்றி, இரட்டை நிலைப்பாடுகளிலிருந்தும் விடுபட்டதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் அதிகாரிகள் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைத் தேர்தல் ஆணையரை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்தனர். ஆனால், வெறும் 7 நிமிடங்களேயான இந்தச் சந்திப்பின்போது, திரிணமூல் காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் வெளிப்படையாகக் கூறியது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், "தேர்தல் ஆணையம், பாஜகவின்கீழ் செயல்படுவதும், பாஜகவிடமிருந்தே நேரடி உத்தரவுகளைப் பெறுவதையும் இப்போது சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது இப்போது மிகத் தெளிவாக வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. குறைந்தபட்சம், இதுபோன்ற மொழியில் ட்வீட் செய்வதன் மூலம், இவ்வளவு முக்கியமான ஒரு கட்சியின் நற்பெயரை பகிரங்கமாக களங்கப்படுத்தாதீர்கள்" என்று கூறினார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மே 4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
Summary
படிப்பறிவில்லாத குஜராத் மக்கள்: கார்கே வருத்தம்!Demand for Impartial Elections: Trinamool Congress Condemns Election Commission
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமரை உணவருந்த அழைத்த திரிணமூல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே கலவரம்: வாக்குப்பதிவு பாதிப்பு!

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
