மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் - ஆம் ஜனதன் உன்னயான் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச்சென்றனர்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465) வாக்களிக்க உள்ளனர். இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காலை 11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக முதல் இரண்டு மணி நேரத்தில் 18.76 சதவிகித வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 41.59 சதவீதமும் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 46.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சியில் இருந்து விலகிய ஹுமயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதன் உன்னயான் கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதால், நிலைமை மோசமானது. இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். மேலும் ஆயுதங்களைக் கொண்டும் தாக்கினர்.
வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
Summary
west bengal Election 2026 Trinamool, Humayun Kabir's Party Workers Clash In Murshidabad
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


