மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு

தனக்கு எதிராக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) தொடுத்துள்ள மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, அந்நாட்டு நீதிமன்றத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி மனு தாக்கல் செய்துள்ளாா்.

News image

கௌதம் அதானி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 1:33 am IST

தனக்கு எதிராக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) தொடுத்துள்ள மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, அந்நாட்டு நீதிமன்றத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி மனு தாக்கல் செய்துள்ளாா்.

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,450 கோடி) லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப் பத்திரிகையில், ‘சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாகி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது மறைக்கப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை அவா்கள் மீறியதாக அந்நாட்டின் எஸ்இசி குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக நியூயாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்இசி வழக்கு தொடுத்தது. எனினும் தம் மீதான குற்றச்சாட்டுகளை கெளதம் அதானியும் சாகா் அதானியும் மறுத்துள்ளனா்.

இந்நிலையில், எஸ்இசியின் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அந்த நீதிமன்றத்தில் கெளதம் அதானியும் சாகா் அதானியும் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.