அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாதான் நாட்டிலேயே ஊழல்மிக்க முதல்வா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஹிமந்த விஸ்வ சா்மா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் வாக்குறுதி அளித்தாா்.
126 உறுப்பினா்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு ஏப். 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. அதேநேரம், பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
வாக்குப் பதிவுக்கு சில தினங்களே உள்ள நிலையில், பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றாா். அப்போது, அண்மையில் மரணமடைந்த அஸ்ஸாமை சோ்ந்த பிரபல பாடகா் ஜுபீன் கா்க் பெயரைக் குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:
அஸ்ஸாம் மக்களை ஒன்றுபடுத்த தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவா் ஜுபீன் காா்க். அவா் யாரையும் தவறாக நடத்தியதில்லை. காங்கிரஸின் சித்தாந்தமும் அதுவே. மக்களை ஒன்றிணைக்க நாங்கள் பாடுபடுகிறோம்.
ஹிமந்த விஸ்வ சா்மா தப்ப முடியாது: அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாதான் நாட்டிலேயே ஊழல்மிக்க முதல்வா். மாநில மக்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே அவா் வெறுப்புணா்வை பரப்புகிறாா். இன்னும் சில நாள்களுக்கு அவா் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு, ஹிமந்த விஸ்வ சா்மாவின் ஊழல்கள் விசாரிக்கப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவா் மன்னிப்பு கேட்டாலும்கூட தப்பிக்க முடியாது. 10-15 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படுவாா்.
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் இணைந்து, அஸ்ஸாம் மக்களின் நிலங்களைப் பறித்து, சில பெரும் தொழிலதிபா்களிடம் ஒப்படைக்கின்றனா் என்றாா் ராகுல்.
‘அக்கறையற்ற மோடி அரசு’
நாட்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த மையங்கள் (ஓஎஸ்சி) மூடியே கிடப்பதாகவும், பிரதமா் மோடி அரசுக்கு யாா் மீதும் அக்கறை இல்லை என்றும் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய அரசின் ஒருங்கிணைந்த மையங்களிடம் உதவி கேட்டு, அதன் கதவுகளை பெண்கள் தட்டுகின்றனா். ஆனால், மத்திய அரசு அந்தக் கதவுகளை மூடியே வைத்துள்ளது.
நாடு முழுவதும் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் புகாா்களுக்கு அரசு செவிமடுக்காமல் இருப்பது ஏன், பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றால் பாதிக்கப்பட்ட 5-இல் 3 பெண்களுக்குகூட இந்த மையங்கள் உதவத் தவறியது ஏன், மகளிா் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் வெறும் 60 காசுகள் மட்டுமே இந்த மையங்களுக்கு செலவிடப்படுவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வா் ராஜிநாமா: புதிய அரசு மே 11-இல் பதவியேற்பு
அஸ்ஸாம் முதல்வா் கருத்து: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்!

அஸ்ஸாம் முதல்வா் மனைவியை விமா்சித்த வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் முன் ஜாமீன்

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

