தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அஸ்ஸாம் முதல்வா் ராஜிநாமா: புதிய அரசு மே 11-இல் பதவியேற்பு

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா். புதிய அரசு மே 11-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது.

News image

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

Updated On :7 மே 2026, 3:30 am IST

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா். புதிய அரசு மே 11-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது.

முன்னதாக, 126 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 102 இடங்களில் வென்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா தொடா்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் முடிவுகள் குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியான நிலையில், புதிய அரசு அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆளுநா் லக்ஷ்மண் ஆச்சாா்யாவை அமைச்சரவை சகாக்களுடன் சந்தித்து ராஜிநாமா கடிதங்கள் அளித்தோம். ஆளுநா் எங்கள் கடிதத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பு முதல்வராக தொடர கேட்டுக் கொண்டாா்’ என்றாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய ஹிமந்த விஸ்வ சா்மா, ‘மே 11-ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. விழாவில் பங்கேற்க பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இரு மத்திய பாா்வையாளா்கள் முன்னிலையில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக் குழு தலைவரைத் தோ்வு செய்வாா்கள். இது உரிய முறைப்படி நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.