விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திரிணமூலை வேரோடு பறித்து வங்காள விரிகுடாவில் வீசுங்கள்! மமதா தொகுதியில் அமித் ஷா பேச்சு!

மமதா பானர்ஜி தொகுதியில் அமித் ஷா பிரசாரம் பற்றி...

News image

அமித் ஷா சாலைவலம் - X / BJP

Updated On :2 ஏப்ரல் 2026, 12:50 pm IST

திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வேரோடு பறித்து வங்காள விரிகுடாவில் வீசி எறிய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சாலைவலமாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

”இந்த முறை யாரும் பயப்படத் தேவையில்லை. மேற்கு வங்க வாக்காளர்களை எந்தக் குண்டராலும் தடுத்து நிறுத்த முடியாது. திரிணமூல் காங்கிரஸை வேரோடு பறித்து வங்காள விரிகுடாவில் வீசியெறிய, மக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

இந்த முறை மேற்கு வங்கத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும், ஆனால், பவானிபூரில் அத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீகளா? இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Summary

Uproot the Trinamool and cast it into the Bay of Bengal! Amit Shah speaks in Mamata's constituency!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.