பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்டுப்படுத்துவதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அசாமில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்பி அங்லோங் பகுதியில் வியாழக்கிழமை (ஏப். 2) அன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் நான்கு முதல் ஐந்து முக்கிய துறைகளை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்ததின் மூலம் இந்தியாவின் சில முக்கியமான துறைகளை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டார் பிரதமர் மோடி. முதலில், இதுவரை எந்த பிரதமரும் செய்யாத ஒன்றாக இந்தியாவின் விவசாய் சந்தையை அமெரிக்க விவசாயிகளுக்குத் திறந்துவிட்டார். இதனால், சிறியளவில் விவசாயம் செய்து வரும் இந்திய விவசாயிகள் அழிக்கப்படுவார்கள்.
இந்தியாவின் எரிசக்தித் துறையையும் முழுவதுமாக அமெரிக்காவிடம் மோடி ஒப்படைத்துவிட்டார். இதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கேட்காமல் நம்மால் ரஷியா, ஈரான் மற்றும் இராக்கிடம் இருந்து எண்ணெய்யை கொள்முதல் செய்ய முடியாது.
இத்துடன், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான சரக்குகளை இந்தியா வாங்கும் என மோடி உறுதியளித்துள்ளார். இதனால், சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் முழுவதுமாக அழிக்கப்படும்.
பின்னர், ஏன் இந்த ஒப்பந்தம்? ஏனென்றால், நரேந்திர மோடியை டொனால்ட் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். மோடியின் ஊழல் மற்றும் அதானி நிறுவனத்தின் ஆவணங்கள் குறித்து அதிபர் டிரம்ப்புக்கு தெரியும். அதானி மீது அதிபர் டிரம்ப் குற்றவழக்குப் பதிவு செய்துள்ளார். அதனால், அவரால் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது.
மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதையொரு ஆயுதமாக வைத்து பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்தி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.
Summary
Senior Congress leader and Lok Sabha MP Rahul Gandhi has stated that US President Donald Trump controls Prime Minister Narendra Modi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு

இந்தியாவின் தரவுகளை டிரம்ப்பிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


