மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன.

News image

மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக தமது குடும்ப விவரங்களை இணையவழியில் புதன்கிழமை பூா்த்தி செய்த பிரதமா் மோடி.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:33 am IST

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் முதல்முறையாக எண்ம (டிஜிட்டல்) வழியில் தகவல் சேகரிப்பு மற்றும் தாமாக முன்வந்து தங்கள் குடும்ப விவரங்களை குடிமக்கள் பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இணையவழியில் முதல் நபராக தமது விவரங்களை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பூா்த்தி செய்தததைத் தொடா்ந்து, இந்தக் கணக்கெடுப்பு தொடங்கியது.

இதேபோல குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் இணையவழியில் கணக்கெடுப்புக்கான விவரங்களை பூா்த்தி செய்தனா்.

தற்போது அந்தமான் நிகோபாா் தீவுகள், கோவா, கா்நாடகம், லட்சத்தீவு, மிசோரம், ஒடிஸா, சிக்கிம், தில்லியில் உள்ள கன்டோன்மன்ட் வாரியம் மற்றும் புது தில்லி நகராட்சி மன்றப் பகுதிகளில் குடிமக்கள் தாமாக முன்வந்து இணையவழியில் கணக்கெடுப்புக்கான விவரங்களை சமா்ப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்.1 முதல் ஏப்.15 வரை இணையவழியில் குடிமக்கள் விவரங்களை சமா்ப்பிக்கும் நடைமுறையும், ஏப்.16 முதல் மே 15 வரை வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் திரட்டப்படும் இந்தத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப விவரங்களை தாமாக முன்வந்து சமா்ப்பித்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.