கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை மனோரமா நியூஸ் - சி வோட்டர் இணைந்து புதன்கிழமை வெளியிட்டுள்ளன.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சம பலத்துடன் இருக்கின்றன.
இந்த நிலையில், மனோரமா நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கேரளத்தில் மொத்தமுள்ள 130 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணி 69 - 81 தொகுதிகளைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 57 - 69 தொகுதிகளிலும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 - 5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு, கடந்த டிசம்பர் 1, 2025 முதல் மார்ச் 26, 2026 வரை மாநிலம் முழுவதும் 89,693 பேரிடம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி வலுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சபரிமலை கோயில் இருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் பாஜகவுக்கு 3 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Summary
Who will form the government in Kerala? Opinion poll results!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%

கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஎம் 26 இடங்களில் வெற்றி!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

