பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

27.5.1976: ஜூன் முதல் சென்னை பள்ளிகள் காலை 8-30, 9 மணிக்கு துவங்கும்

ஜூன் முதல் சென்னை பள்ளிகள் காலை 8-30, 9 மணிக்கு துவங்குவது பற்றி...

News image

27.5.1976 - Dinamani

Updated On :27 மே 2026, 4:00 am IST

சென்னை, மே. 26 - வரும் ஜூன் மாதத்தில் சென்னை நகரில் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு அவை புதிய நேரப்படி இயங்கத் துவங்கும்.

தென் சென்னையில் உ ள்ள பள்ளிக் கூடங்கள் தினசரி காலை 8.30 மணி முதலே இயங்கத் துவங்கும். வட சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள் காலை 9 மணி முதல் இயங்கத் துவங்கும். போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக இந்த ஏற்பாடு.

பள்ளிப் படிப்புத் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் பள்ளித் துறை இன்ஸ்பெக்டர்கள் எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் வாய்மொழி மூலமாக இந்த உத்தரவைத் தெரிவித்துள்ளனர். ...

மதுரை கோபுரத்தில் கிடந்த பிணம் - மின்சாரம் தாக்கி இறந்தான்

மதுரை, மே. 25- 12 வயதுள்ள ஒரு சிறுவனின் பிரேதம் மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய கோபுரத்தின் 9-வது அடுக்கில் கிடந்தது என்று செய்தி வந்ததல்லவா? இதன் ரகசியம் இப்போது தெரிந்து விட்டது. வட இந்தியாவிலிருந்து வந்திருந்த சில யாத்ரீகர்கள் கோபுரத்தில் ஏறியபோது இந்தச் சடலத்தைக் கண்டுபிடித்துத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பையனைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன. இந்தப் பையனின் பெயர் சாந்தாராம். மதுரையின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திராநகரில் வசிக்கும் ஒரு விதவையின் மகன் இவன்.

திங்கட்கிழமை காலை அவன் தன் வீட்டிலிருந்து புறப்பட்டானாம். அவன் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு பின்னர் உயிர் நீத்திருக்க வேண்டுமென்று போலீசார் கருதுகின்றனர். பிரேத பரிசோதனை செய்த டாக்டரும் இதை ஆமோதித்தார்.

Summary

From June, schools in Chennai will begin at 8:30, 9:00 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.