தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

9.5.1976: கடும் வெய்யிலுக்கு கிண்டி பாம்பு பண்ணையில் 30 பாம்புகள் பலி

கடும் வெய்யிலுக்கு கிண்டி பாம்பு பண்ணையில் 30 பாம்புகள் பலி...

News image

9.5.1976 - Dinamani

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

சென்னை, மே. 6 - கடந்த சில தினங்களாகச் சென்னை நகரை வாட்டிய கடும் வெயில் தாங்காமல், கிண்டி பாம்பு பண்ணையில் 30 பாம்புகள் மடிந்தன. அதில் அபூர்வமான வெள்ளை நாகப் பாம்பு ஒன்றும் ஒன்றாகும்.

கடுமையான அனல் காற்றினால், பாம்புப் பண்ணையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக பாம்பு பண்ணையின் டைரெக்டர் ரோமுலஸ் விட்டேச்கர் கூறினார்.

வெயில் காரணமாக மரங்கள் உலர்ந்து வருவதால், மரத்தில் வசிக்கும் பாம்பு ரகங்களால் வெயிலைத் தாங்க முடியவில்லை என்றும், சாதரணமாக 90 டிகிரி வெப்பம்வரை தான் அவற்றால் தாங்கிக் கொள்ள முடியுமென்றும் அவர் சொன்னார்.

ஆனால், சமீப நாட்களில் சென்னையில் 109.8 டிகிரி வரை வெப்பம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருஷ காலத்தில் அதுவே அதிக வெப்ப நிலையாகும்.

கிண்டியிலிருப்பதுதான் இந்தியாவிலேயே உள்ள ஒரே ஒரு பாம்பு பண்ணையாகும். இங்கு சாதாரணமாக, வெவ்வேறு வகைப்பட்ட 3000 பாம்புகளும், முதலைகளும், பிற ஊர்வன ஜீவ ராசிகளும் உள்ளன. ...

இத்தாலி பூகம்பத்தில் சாவு தொகை 1000 ஆக உயருகிறது

யுடைன் (இத்தாலி) மே 8 - இத்தாலியின் வட பகுதியில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் தொகை 1000 ஆக உயரக் கூடும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து தொடர்ந்து சடலங்களை மீட்டு வருகின்றன. இந்நிலையில் சாவு தொகை இதற்கும் அதிகமாகவே இருக்கலாம் என்றார் அவர்.

பூகம்பம் தாக்கிய பகுதியின் உள்ளாட்சி அதிகாரிகள் கோரியுள்ள சவப் பெட்டிகளின் எண்ணிக்கையை வைத்து இவ்விதம் மதிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு வரை 551 சடலங்கள் மீட்கப்பட்டதாக ரோம் நகரில் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. எனினும் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் புதையுண்டு கிடக்கலாம் என்று கருதப்படுகிறது. ...

Summary

30 snakes perish at the Guindy Snake Park due to severe heat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.