சென்னை, மே 5 - தாங்களாகவே கணக்கில் காட்டாத கறுப்புப்பணத்தை அறிவித்தவர்களில் நாட்டிலேயே டில்லிவாசி ஒருவர் அதிகபட்சம் ரூ. 14 கோடி அறிவித்திருக்கிறார். மத்திய நேர் முகவரி போர்டு தலைவர் எஸ். ஆர். மேத்தா இன்று இங்கு நிருபர்களிடம் கூறினார்
இந்த கறுப்புப்பண அறிவிப்பு திட்டத்தின் கீழ், இறுதி நிலவரப்படி 2.55 லட்சம் பேர் மொத்தம் ரூ. 1,587 கோடி அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் வரி ரூ. 250 கோடி. 1975-76-ல் அரசுக்குக் கிடைத்தது ரூ. 208 கோடி. மீதி ரூ. 42 கோடி நடப்பு ஆண்டில் வசூலாகும். இதுதவிர கிடைத்த உத்தரவாத பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மதிப்பு ரூ. 50 கோடி. ...
விருந்துக் கட்டுப்பாடு உத்தரவு தளர்த்தப்பட்டது: அரசு விளக்கம்
சென்னை, மே. 5- விருந்துக் கட்டுப்பாடு உத்தரவை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக உணவுப் பொருள் வழங்கு துறை ஆணையாளர் பின்வரும் பத்திரிகைக் குறிப்பை வெளியிட்டுள்ளார்:
இவ்வாணையிலுள்ள விதித் துறைகளை நிறைவேற்றுவதில் பொதுமக்களுக்கு நடைமுறையில் காணும் சில இடையூறுகளைக் குறித்து கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த முறையீடுகளுக்கு இணங்க உணவுப்பொருள் வழங்கு துறை ஆணையாளர் ஊன்றிய ஆய்வுக்குப் பிறகு பின்வரும் தெளிவுரைகளை வழங்குகிறார்:
1. திருமண நாளுக்கு முந்திய நாளன்று 200 விருந்தினர்களுக்கு இரவு உணவில் விருந்தளிக்கலாம். திருமண நாளன்றுகூட காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய ஒவ்வொரு வேளை உணவிற்கும் 200 விருந்தினர்களுக்கு உணவு அளிக்கலாம். இந்த 200 விருந்தினர்கள் என்ற வரம்பில் பிள்ளை வீட்டார் தரப்பிலும், பெண் வீட்டார் தரப்பிலும் சேர்ந்து விருந்தளிப்பவர்கள், விருந்தினர்கள் ஆகியோர் உட்பட 200 விருந்தினர்கள் அடங்குவர். ஆயினும் கல்யாண மண்டபத்தில் உள்ள பணியாளர்கள், சமையற்காரர்கள், நாதஸ்வரக் குழுவினர் இவ்வெண்ணிக்கை வரம்பில் அடங்க மாட்டார்கள். ...
Summary
May 6, 1976: Delhi Resident Declares Rs. 14 Crore in Black Money!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!

5 மாநிலங்களில் ரூ. 651கோடி! தமிழ்நாட்டில் ரூ.170 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!

4ஆவது முறையாக ரூ.100 கோடி வசூலுக்கு தயாரான பிரதீப் ரங்கநாதன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


