சென்னை, மார்ச். 4- விண்வெளிப் போக்குவரத்து ஊர்தி (ஷட்டில்) 1980-ம் வருஷத்துக்குள் நிதர்சன உண்மையாகிவிடும்; விண்வெளிப் பயணமும், உலகில் பிரயாண முறைகளும் அதனால் புரட்சிகரமான மாறுதலை அடைந்துவிடும் என்று, சென்னை வந்துள்ள யு.எஸ் விண்வெளி வீரர் ஆலன் பீன் இன்று கூறினார்.
இந்த விண்வெளி போக்குவரத்து ஊர்தியானது, ஓரளவு ஆகாய விமானமாகவும், ஓரளவு விண்வெளி கப்பலாகவும் இருக்கும் என்றார்.
விமானப் பயணத்தைவிட இதில் செல்வது மலிவானதாக இருக்கும். பயண நேரமும் குறைந்து விடும் என்றார்.
நிலாத் தரையில் நடந்த 4-வது மனிதரான காப்டன் ஆலன் பீன், இப்போது விண்போக்குவரத்து ஊர்தி (ஷட்டில்) பயிற்சி பெற்று வருகிறார்.
விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கவும் இந்த ஊர்தி துணை புரியும் என்றார். இந்த விண்வெளி ஊர்தியின் உதவியுடன், அந்த நிலையத்தில் சகலவிதமான கருவிகளுடனும் கூடிய ஒரு சிறிய ஆய்வுக் கூடம் அமைக்க முடியும் என்றார் ஆலன் பீன்.
அப்பாலோ ரக விண்வெளி கப்பல்கள் மேற்கொண்ட விண்வெளிப் பயணங்களைவிட, இந்த விண்வெளி "ஷட்டில்" பயணத்துக்கு செலவும் மிகமிகக் குறைவாகவே ஆகும்; ஏனெனில், இந்த ஊர்தியைத் தரைக்கு மீண்டும் கொண்டு வந்து, மறுபடியும் விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
விண்வெளி ஷட்டில் உபயோகத்துக்கு வந்து விட்டால், இந்த சென்னை நகரமானது அமெரிக்காவிலுள்ள லாஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த வீடு போல ஆகிவிடும். அரைமணி நேரத்தில் அங்கிருந்து இங்கு பறந்து வந்து விட முடியும் என்றார்.
பயிரிடும் சாகுபடியாளர் பற்றிய அவசரச் சட்டம் - ஹைகோர்ட் தீர்ப்பை அடுத்து நடவடிக்கை
சென்னை, மார்ச். 6 - பயிரிடும் சாகுபடியாளர் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து த.நா. கவர்னர் ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறார்.
இதன்படி பயிரிடும் சாகுபடியாளர்கள் வசமுள்ள நிலங்களை நிலசுவான்தார்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சொந்த சாகுபடிக்கென்று திரும்பப் பெற முடியாது என்று விதிக்கப்பட்டிருக்கிறது. (குறிப்பிட்ட சில நிலைமைகளில் நிலசுவான்தார்கள் இந்த நிலங்களில் பாதியை மீண்டும் தாமே சுவாதீனப்படுத்திக் கொள்ளலாம் என்ற உரிமை இந்த அவரசச் சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்படுகிறது.)
Summary
7.3.1976: From America to Chennai in half an hour - U.S. astronaut on space 'shuttle'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

20.6.1976: சென்னை சுரங்க ரயில் திட்டம் இப்போதில்லை?
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிய ஆய்வறிக்கை வெளியீடு

தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


