பெங்களூர், மார்ச் 5- இன்று காலை பெங்களூரிலிருந்து 100 கிலோ மீட்டர் (சுமார் 63 மைல்) தொலைவில் உள்ள மண்டயம் அருகே உள்ள சிவஹள்ளியில் தனியார் பிரயாணிகள் பஸ் ஒன்று ஒரு கால்வாயில் விழுந்து 100 பேர் மூழ்கி மரணமடைந்தனர் என்று அஞ்சப்படுகிறது.
ஜக்கனஹள்ளிக்கும் மண்டயத்துக்கும் இடையே இந்த பஸ் ஓடிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்தது. இன்றிரவு இங்கு கிடைத்த அதிகாரபூர்வ தகவலின்படி 9 பேரே பிழைத்ததாக தெரிகிறது.
கர்நாடகா பொதுப் பணித்துறை அமைச்சர் எச்.எம். சென்ன பாசப்பாவும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சி.வி.எஸ். ராவும் இங்கிருந்து விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.
கால்வாயில் ஏராளமான தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால், சிக்கிக்கொண்ட பயணிகளை காப்பாற்றும் முயற்சிகள் சிரமமாகிவிட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். பஸ் முழுமையும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. கால்வாயில் தண்ணீரின் ஆழம் 12 அடி.
பஸ்ஸில் 100 பேருக்குமேல் பிரயாணம் செய்து கொண்டிருந்தாகவும், சிலர் பஸ்ஸின் மேலும் இருந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல் கூறியது.
மீட்பு பணிக்கு உதவ பெங்களூர், மைசூர், மண்டயத்திலிருந்து 3 கிரேன்களும், 12 டிராக்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.
விபத்து செய்தி கிடைத்தவுடன் கால்வாய்க்கு ஜலம் விடுவது கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறுத்தப்பட்டது.
முதிகெரே ஜாத்ரா விழாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மக்கள் பஸ்ஸில் நிறைந்திருந்ததாக கூறப்பட்டது. கால்வாயின் குறுகிய பாலம் மீது பஸ் சென்றபோது ஒரு மாட்டின் மீது மோதலை தவிர்க்க டிரைவர் முயற்சித்தபோது கட்டுப்பாட்டை அவர் இழந்ததால் காவேரி ஜலத்தில் பஸ் விழுந்ததாக ஒரு பயணி கூறினார்.
விபத்து செய்தி கேட்டதும் கர்நாடகா கவர்னர் தீட்சித்தும், முதல்வர் தேவாரஜ அர்சும் அதிர்ச்சியடைந்து, வருத்தம் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்தவர்களின் நெருங்கிய உறவினருக்கு உடனே தலா ரூ. 500 அளிக்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்தது.
'டெலிவிஷன் இந்தியா" ஏப். 1 முதல் தனி நிறுவனமாக இயங்கும்
புதுடில்லி, மார்ச். 5- அகில இந்திய ரேடியோ நிர்வாகத்திலிருந்து டெலிவிஷன் பிரிவு ஏப். 1 முதல் தனியாகப் பிரிக்கப்பட்டு டைரக்டர் ஜெனரல் ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று இங்கு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. புது அமைப்பின் பெயர் தூரதர்ஷன் - டெலிவிஷன் இந்தியா.
புது டைரக்டர் ஜெனரல் டெலிவிஷன் சர்வீஸை நடத்துதல், நிர்வாகம், அதன் ஊழியர்கள், நிகழ்ச்சி கொள்கை ஆகியவற்றுக்குப் பொறுப்பாளியாக இருப்பார்.
நிர்வாக விவரங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒலி, டெலிவிஷன் சம்பந்தமாக புது அமைப்புகளை நிர்மாணிப்பதையும், தற்போதுள்ள ரேடியோ நிலையங்களின் பராமரிப்பையும் டெலிவிஷன் நிலையங்களின் பராமரிப்பையும் தற்போது கவனித்து வரும் நான்கு பிராந்திய எஞ்சினீயர்களில் ஒருவர் அவரது ஊழியர்களுடன் டெலிவிஷன் சம்பந்தமான பணியை மேற்கொண்டு பராமரிப்பதற்காக " தூரதர்ஷன்" தலைமை எஞ்சினீயரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
எனினும் அகில இந்திய ரேடியோலின் ஆராய்ச்சி, பயிற்சி பிரிவு டெலிவிஷன் இந்தியா சம்பந்தமான ஆராய்ச்சி, பயிற்சி பணியைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் என்று அறிவிப்பு மேலும் கூறியது.
டெலிவிஷன் இந்தியா(ஹிந்தியில் "தூரதர்ஷன்") ஏப். 1 முதல் யூனியன் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்த தனி நிறுவனமாக இருக்கும்.
Summary
100 dead as bus falls into Cauvery canal in Karnataka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தெய்வ தரிசனம்... தொழில், பொருளாதாரம் மேம்பட தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர்!

19.6.1976: பிஎச்.டி. பட்டம் பெற புது நிபந்தனை

ஜூன் 6,7-இல் மீண்டும் இளநிலை க்யூட் தோ்வு

கால்வாயில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


