ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

9.4.1976: அவசர நிலையை நீக்க ஏற்ற சூழ்நிலை இல்லை

அவசர நிலையை நீக்க ஏற்ற சூழ்நிலை இல்லை என மந்திரி தெரிவித்தது பற்றி...

News image

9.4.1976 - Dinamani

Updated On :9 ஏப்ரல் 2026, 4:04 am IST

புதுடில்லி, ஏப். 8 - நெருக்கடி நிலையை அகற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்று உள்துறை துணை அமைச்சர் மோசின் கூறினார்.

பாகிஸ்தானில் ராணுவ பலம் பெருகி வருவது பற்றியும், இந்துமாக்கடல் பகுதியில் பதட்ட நிலையை உருவாக்க வல்லரசுகள் முயற்சி செய்து வருவது பற்றியும் வெளிவிவகார அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் சுட்டிக் காட்டியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.

"நாட்டிற்குள்ளேயே அழிவு சக்திகள் இன்னமும் இருந்துவருகின்றன. ஆனால், அவை பதுங்கியிருக்கின்றன'' என்று அவர் சொன்னார்.

இந்திய பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தக் கோரும் தனியார் மசோதா மீது லோக்சபை விவாதத்தில் மோசின் குறுக்கிட்டுப் பேசினார். இடது கம்யூனிஸ்ட் அங்கத்தினர் சோமநாத் சட்டர்ஜி பால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவைப் பின்னர் நிராகரித்து விட்டது.

நடப்பு ஆண்டில் திட்டச் சார்பில்லா செலவுகளில் சிக்கனம்: தமிழக அரசு முடிவு

திருச்சி, ஏப். 8 - 1976-77-ம் வருடத்தில் கணிசமான அளவு பெரியதொரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தினையொட்டி, நடப்பு ஆண்டில் திட்டச் சார்பில்லா செலவுகளில் கடுமையான சிக்கனத்தைப் பேண தமிழ்நாடு அரசு' முடிவு செய்திருக்கிறது.

கீழ்க்கண்ட சிக்கன நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. மறு உத்தரவு வரையில் இந்த உத்தரவுகள் அமலில் இருக்கும்.

ஆறு மாதங்களாகவும், அதற்கு மேலாகவும் காலியாக உள்ள பதவி எதுவும் அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் பூர்த்தி செய்யப்படக்கூடாது. இத்தகைய பதவியைப் பூர்த்தி செய்ய நிதி இலாகாவின் திட்டவட்டமான இசைவினை, செக்ரடேரியட்டின் நிர்வாக இலாகாக்களும், இலாகா தலைமை அதிகாரிகளும் பெறுவது அவசியம்.

திட்டச் சார்பில்லா இனங்களில் புதிய பதவி எதையும் உருவாக்கக்கூடாது என்று தடை உள்ளது. இந்தத் தடை தொடர்ந்து நீடிக்கும். இது கடுமையாக அமல் செய்யப்படும். பிரதம காரியதரிசி, நிதிக் காரியதரிசி, சம்பந்தப்பட்ட நிர்வாக இலாகாவின் காரியதரிசி ஆகியோர் அடங்கிய குழு இந்தத் தடைக்கான விதிவிலக்குகளை அங்கீகரிக்க வேண்டும். ...

Summary

April 9, 1976: The situation is not conducive to lifting the Emergency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.