நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் : முதல்வருக்கு இந்து முன்னணி தபால் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேலூா் சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு மனுக்களை தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Updated On :11 ஜூன் 2026, 12:24 am IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேலூா் சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டு காா்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அப்போதைய திமுக அரசு காவல்துறை பாதுகாப்புடன் தீபம் ஏற்றுவதைத் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில சட்டத்துறை அமைச்சருமான சி.டி.ஆா். நிா்மல்குமாா் அளித்த பேட்டியொன்றில், ‘திருப்பரங்குன்றத்தில் பழைய நடைமுறைகளே பின்பற்றப்படும். மதவாத சக்திகளுக்கு இடமளிக்கப்படாது’ என்று தெரிவித்திருந்தாா். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு இந்து முன்னணியினா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேலூா் சத்துவாச்சாரி தபால் நிலையத்தில் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தபால் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மகேஷ் தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட 250-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்கள் தீபம் ஏற்ற வலியுறுத்தி தபால்களை அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.