தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

உலகின் மிகப்பெரிய மின் பகிர்மான நிறுவனங்களில் ஒன்றான பவர்கிரிட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - POWERGRID

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு 'மகாரத்னா' பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட், உலகின் மிகப்பெரிய மின் பகிர்மான நிறுவனங்களில் ஒன்றாகும். இது மாநிலங்களுக்கு இடையேயான மின்பரிமாற்ற அமைப்பு மற்றும் தேசிய, பிராந்திய மின் கட்டமைப்புகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு, மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான பொறுப்புகளுடன் மின்பரிமாற்றத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 3000 நகரங்களில் சேவை மையங்களையும், 500 நகரங்களில் நகரங்களுக்கு இடையேயான வலையமைப்பையும் கொண்டு, ஏறத்தாழ 1,00,000 கி.மீ. தொலைத்தொடர்பு வலையமைப்பையும் சொந்தமாக வைத்து இயக்கி வரும் இந்த நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி, ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி, அலுவலர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்து தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CC/01/2026

மொத்த காலியிடங்கள்: 668

பணி: Diploma Trainee (Electrical) (DTE)

பணி: Diploma Trainee (Civil) (DTC)

பணி: Diploma Trainee (Survey) (DTS)

பணி: Junior Officer Trainee (HR) JOT (HR)

பணி: Junior Officer Trainee (F&A) JOT (F&A)

பணி: Junior Technician Trainee (Survey) JTT(Survey)

சம்பளம்: மாதம் ரூ.21,000 - 74,000

தகுதி: Diploma Trainee பணிகளுக்கு பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம், சர்வே ஆகிய ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Junior Officer Trainee (HR/F&A)பணிகளுக்கு பிபிஏ, பிபிஎம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். F&A பிரிவிற்கு சிஏ, சிஎம்ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Junior Technician Trainee பணிகளுக்கு சர்வேயர் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 11.5.2026 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, கணினி திறன் தேர்வு, டிரேடு தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பத்தாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் முக்கிய பாடத்திலிருந்து 100 மதிப்பெண்களுக்கும், பொதுஅறிவு கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். இது தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

தேர்வு மையம்: சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

பணிக்கு தேர்வு செய்யப் படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.27,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: Junior Technician Trainee பணிக்கு ரூ. 100. Junior Officer Trainee பணிக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in என்ற இணைய தளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் நகலை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.5.2026

ஆன்லைன் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சாதாரண வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from eligible candidates for the position of 660 Non-Executive Posts...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.