
செய்திகள்
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்களித்த மகளிர் - பிடிஐ
18.76% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளது.
வட வங்காளம் மற்றும் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 152 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு பலத்துடன் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.
வாக்களித்தார் சுவேந்து அதிகாரி
நந்திகிராம் தொகுதி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்கு செலுத்தினார்.

சுவேந்து அதிகாரி
பாரமதி, ரஹூரி இடைத்தேர்தல் 9 மணி நிலவரம்
மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி பாராமதியில் 8 சதவிகிதம், ரஹுரியில் 6 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரமதியில் வாக்களித்தார் சுப்ரியா சூலே
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே பாரமதி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.

சுப்ரியா சூலே
பாரமதி, ரஹூரியில் இடைத்தேர்தல் ஏன்?
மகராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார், ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இதனால் பாரமதியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சிவாஜி கார்டிலே காலமானதைத் தொடர்ந்து, ரஹுரி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது.
ரஹுரி தொகுதியில் சிவாஜி கார்டிலேவின் மகன் அக்ஷய் கார்டிலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்சிபி (எஸ்பி) வேட்பாளர் கோவிந்த் மொகாடே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடியைச் சேர்ந்த சந்தோஷ் சால்கே ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: கார்கே
மேற்கு வங்கத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அனைத்துக் குடிமக்களும் தவறாமல் வெளியே வந்து, பெருமளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை ஊக்கமிழக்கச் செய்ய முயலும் சக்திகளைக் கண்டு நீங்கள் அஞ்சிவிட வேண்டாம். உங்கள் வாக்குதான் உங்கள் குரல்; அந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
11 மணி நிலவரம்: 41.11% வாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 41.11சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மேதினிபூரில் அதிகபட்ச வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 41.59 சதவீதமும், மேற்கு மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 46.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
மிகக் குறைந்த அளவாக, கூச் பெஹார் தெற்குத் தொகுதியில் 38.67 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மால்டா மாவட்டத்தின் சஞ்சல் தொகுதியில் 38.22 சதவீதமும், ஹரிச்சந்திரபூர் தொகுதியில் 37.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
வாக்குச்சாவடியில் நுழைந்த யானை
மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி அருகே காட்டு யானை நுழைந்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்த நிலையில், வாக்களிக்க வரிசையில் காத்திருந்த மக்கள், யானையைக் கண்டு சிதறி ஓடினர். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
முர்ஷிதாபாத்தில் இரு கட்சிகளிடையே கலவரம்! வாக்குப்பதிவு பாதிப்பு!
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் - ஆம் ஜனதன் உன்னயான் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
1 மணி நிலவரப்படி 62.18% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் இன்று காலை 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
4 முறை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்
மேற்கு வங்கத்தின் கோராபஜார் வாக்குச்சாவடியில் 4 முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியும் பிரச்னை சரியாகவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தேர்தல் அலுவலர்களிடன் புகார் அளித்துள்ளார்.
மக்கள் வெய்யிலில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பதால் உடனடியாக பிரச்னையை சரி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
3 மணி நிலவரம்: 78.77% வாக்குப் பதிவு
மேற்கு வங்கத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 மணி நிலவரம்: 89.93% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 89.93% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாரமதி, ரஹூரி இடைத்தேர்தல் 5 மணி நிலவரம்
மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி பாராமதியில் 52.44 சதவிகிதம், ரஹுரியில் 50.68 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத்தின் உம்ரேத் இடைத்தேர்தல் நிலவரம்
குஜராத் மாநிலத்திலுள்ள உம்ரேத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 54.43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு முடிந்தது
மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.93% வாக்குகள் பதிவாகியுள்ளது.
6 மணி நிலவரம்: 91.74% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் பிற்பகல் 6 மணி நிலவரப்படி 91.74% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவில் புதிய வரலாறு! வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!
அதிக வாக்குப் பதிவு சதவிகிதத்துக்கு பாராட்டு தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "சுதந்திரத்துக்கு பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் ஆணையத்தின் சல்யூட்" என்று கூறியுள்ளார்.
முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், 1.84 கோடி (90.92%) ஆண் வாக்காளர்கள், 1.76 கோடி (92.69%) பெண் வாக்காளர்கள் மற்றும் 465 (56.79%) மூன்றாம் பாலினத்தவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!

தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!

தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



