மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் பெயர்கள் நீக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டு ஆத்திரமடைந்த மக்கள் நீதித்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப் பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தமாக 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப். 29 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையும் பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
தேர்தலுக்கு முன்னதாக, கடந்த 2025-இல் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்த பிகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து, தோ்தலைச் சந்திக்கவிருந்த தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 ஆம் கட்ட எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பட்டியலில், தமிழகத்தில் இருந்து 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேபோல, மேற்கு வங்கத்தில் இருந்து 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சில வாக்காளர்களின் பெயர்கள் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தப் பட்டியலில் இருந்த அனைத்து வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட்டது.
இதில், குறிப்பாக 24 பர்ஹானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்ஹாட் வடக்கு தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேபோல், மால்டா மாவட்டத்திலும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் அங்கு சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாச்சக்கில் ஆத்திரமடைந்த மக்கள், மூன்று பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 7 நீதித்துறை அதிகாரிகளை அவர்கள் அலுவலகத்திலேயே நேற்று(ஏப்.1) முற்றுகையிட்டு அவர்களை சிறைப்பிடித்தனர்.
அந்த அதிகாரிகளை இன்று அதிகாலை 1 மணி வரை சிறைப்பிடித்து வைத்திருந்த நிலையில், காவல்துறையினர், துணை ராணுவத்தினர் அங்கு வந்து கூடியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நீதித்துறை அதிகாரிகளை மீட்டனர்.
நீதித்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்களின் வாகனங்கள் மீது அங்கிருந்த போராட்டக்காரர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதால், அங்கு அசாதாரண சூழல் உருவானது. இதனால், ஒரு காரின் கண்ணாடி உடைந்தது.
மால்டாவில் நடந்த சம்பவம் குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Summary
Seven judicial officers were held hostage for over nine hours in West Bengal's Malda district by a group of voters whose names were deleted from the voter list during the Special Intensive Revision.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம், அஸ்ஸாம் தோ்தல்: தனித்தொகுதிகளில் பாஜக அமோகம்

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா
முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்! மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய சர்ச்சை!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


