லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பாரிவள்ளலை ஆதரித்து லால்குடி ரவுண்டானா பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாரிவள்ளலுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். ஆனால் உங்கள் ஆதரவை பார்க்கும் பொழுது ஏற்கெனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க முடிவு செய்து விட்டீர்கள்.
கடந்த முறை 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வைத்த நீங்கள் தற்போது பாரிவள்ளலை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாரிவள்ளலை எதிர்த்து அதிமுகவில் லாட்டரி டிக்கெட் நிற்கிறார். அந்த அம்மையார் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி. அவர்கள் குடும்பத்தின் மேலே 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது.
அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு கட்சியிலும் துண்டு போட்டு வைத்துள்ளனர். அவரது நோக்கம் தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட்டை கொண்டு வந்து தமிழ்நாட்டை சீரழிப்பது தான் அவர்களது நோக்கம். லால்குடி மக்களை பணத்தால் ஜெயிக்கலாம் என தப்பு கணக்கு போட்டு வந்துள்ளனர். லால்குடி சுயமரியாதை மண். அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் நீங்கள், பணத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த 5 வருடத்தில் பல்வேறு திட்டங்களை நமது முதல்வர் செய்து உள்ளார். அந்த தைரியத்தில் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்து உள்ளேன். கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு கேட்கின்ற நிதி, திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் இது எதுவும் இல்லாமல் முதல்வர் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செய்து உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் வரவிட மாட்டார்கள் என அதிமுக என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு பாஜக தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறது.
நீங்கள் முரட்டு பக்தர்களை பார்த்திருப்பீர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் எடப்பாடி பழனிசாமி முரட்டு அடிமையாக உள்ளார். மோடியின் நம்பர் ஒன் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியை அடிமை என்பதால் அவர் என்னை திட்ட ஆரம்பித்து விட்டார். இந்த அடிமை கூட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் நுழைய விடக் கூடாது. அதை நாம் செய்து காட்டுவோமா என்று இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Deputy Chief Minister Udhayanidhi Stalin has stated that the asset value of the Lalgudi AIADMK candidate is rs. 6,000 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

ஜனநாயகத்தையும் - அரசியலமைப்பையும் காப்போம்! உதயநிதி ஸ்டாலின்

என்ன, ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலின், உதயநிதி சொத்து மதிப்புகள் குறைந்துவிட்டதா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


