தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தவெகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு நெருக்கடிகளை கடந்து தமிழகத்தின் 15வது முதல்வராக தவெகவின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்து வைத்தார்.
இன்று தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தவெக வழக்கறிஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது உற்சாகமான கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது தமிழகத்தின் ஊழல் சக்தியாகவும், போதை சக்தியாகவும், இருந்த திமுகவை ஒழித்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜோசப் விஜய் நல்லாட்சி புரிவார் என்றும் தமிழகத்தில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை அகற்ற முடியாது என்றும் தெரிவித்தனர்.
Summary
Following Vijay taking charge as the Chief Minister of Tamil Nadu, TVK cadres are engaged in enthusiastic celebrations across the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிக்குள் தவெகவினர்! முதல்வர் விஜய் அறிவுறுத்த அண்ணாமலை கோரிக்கை!

முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் டி. கே. சிவகுமார் - புகைப்படங்கள்

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்: தவெகவினர் கொண்டாட்டம்
விடியோக்கள்
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

