மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்க்கு ஆதரவாக போராட்டம்? பாதுகாப்பு வளையத்துக்குள் மெரீனா!

சென்னை மெரீனா கடற்கரையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரித்துள்ளது பற்றி...

News image

மெரீனா கடற்கரையில் காவல்துறை பாதுகாப்பு - X

Updated On :7 மே 2026, 12:33 pm IST

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மெரீனா கடற்கரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.

தனிப் பெரும் கட்சியான தவெகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. விஜய்க்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று இளைஞர்கள் கூடவுள்ளதாக தகவல்கள் பரவின.

இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

Protest in Support of Vijay? Marina Under police surveillance!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.