விசிக, இடதுசாரிகள் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5) நேற்று ஆதரவு அளித்தது.
மேலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவைக் கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது.
மூன்று கட்சிகளின் தலைவர்களும் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெறுகிறதா என்பது உறுதியாக தெரியவில்லை.
இதனிடையே, அதிமுக ஆட்சி அமைக்க திமுகவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக நேற்றிரவு தகவல்கள் வெளியான நிலையில், தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறாக இருக்காது என்று மு.க. ஸ்டாலின் இன்று தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK Leader M.K. Stalin Discuss with VCK and Left Parties!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யாருக்கு ஆதரவு? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

எதிர்க்கட்சித் தலைவர் யார்? திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


