மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பற்றி...

News image

திலகபாமா | செளமியா அன்புமணி - DNS

Updated On :30 மார்ச் 2026, 11:11 am IST

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பாமகவின் பொருளாளர் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக மூன்று வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், மீதமுள்ள 15 வேட்பாளர்களின் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் கட்சியின் பொருளாளர் திலகபாமாவும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் தமிழரசி ஆதிமூலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக பாமகவின் பசுமைத் தாயகம் இயக்கத்தின் தலைவர் செளமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், திருப்போரூரில் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

Summary

Thilagabama to contest against Vijay in Perambur! Sowmya Anbumani to compete in Dharmapuri!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.