விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவண்ணாமலை அதிமுக மாவட்டச் செயலா் நீக்கம்: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - படம் - அதிமுக

Updated On :30 மார்ச் 2026, 2:24 am IST

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்கு முறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறாா்.

அதிமுகவினா் யாரும் அவருடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.