விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மண்ணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மண்ணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image

அதிமுக தலைமை அலுவலகம் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 4:38 pm IST

அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மண்ணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கட்சி, தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன.

இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.