தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி. செல்வத்தை இடைநீக்கம் செய்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இருப்பினும், கடைசி நேரத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதால், தவெக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “திமுகவிடன் பணத்தை வாங்கிக் கொண்டு சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகள் தவெகவில் இணைய வாசலில் காத்துக் கொண்டுள்ளனர். இரண்டு நாள்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Tamil Nadu Congress General Secretary D. Selvam Suspended!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்

இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் இடைநீக்கம்!

நன்றிகெட்ட காங்கிரஸ்: ஆர்.எஸ். பாரதி ஆவேச பேட்டி!
தவெகவுக்கு ஆதரவு! காங்கிரஸ் விதித்த ஒரே நிபந்தனை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

