தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் இடைநீக்கம்!

இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் அலீம் அல் புஹாரி இன்று (மே 8) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image

அலீம் அல் புஹாரி - இன்ஸ்டாகிராம்

Updated On :7 மே 2026, 6:56 pm IST

இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் அலீம் அல் புஹாரி இன்று (மே 8) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரின் உரையை அலீம் மொழிபெயர்த்திருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த இவர், தற்போது அக்கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 118 இடங்கள் தேவை என்பதால் இதர கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வருகிறது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு காங்கிரஸ் (5 எம்.எல்.ஏக்கள்) ஆதரவு தெரிவித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை என்பதால், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததை, அலீம் அல் புஹாரி விமர்சித்துப் பேசியிருந்தார். இதன் விளைவாக தற்போது அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Summary

TVK congress alliance Youth Congress State Secretary Aleem Al-Bukhari Suspended

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.