திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து தவெக தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களிடையே சென்னை நந்தனம் திடலில் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”மிகமிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போகின்ற தேர்தலின் கடைசிப் பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப் போகின்ற கடைசிப் பிரசாரம். மக்களை கண்டுக்காத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிற கடைசி பிரசாரம்.
பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி, அவருடைய வாழ்க்கையை உயர்த்தியுள்ளார். வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி, விலைவாசி உயர்வு என மக்கள் பிரச்னைகளை உயர்த்தியுள்ளார். கடன் சுமையையும் உயர்த்தி வைத்துள்ளார்.
நமது அரசியல் எதிர் திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலையில் இருந்து இதுவரை மாறவில்லை. தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை யாரும் நாசம் செய்ய முடியாது. தவெக நிலைப்பாட்டில் ஒரு இன்ச் கூட மாறவில்லை. மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் இருந்து மாற மாட்டோம். இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் விஜய்யை நம்பலாம். எம்மதமும் நம்மதம் என்பதுதான் விஜய்யின் முகம். சிங்கம் எப்போதும் சிங்கம்தான். தனியாக வந்தாலும் தண்ணீ காட்டிவிடும்.
சிறுபான்மையினர் வாக்குக்காக கோடிக் கணக்கில் செலவிட்டு காங்கிரஸை வாங்கிக் கொள்ள வேண்டியது. கட்சியைக் காப்பாற்ற பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி. ஒரு பக்கம் கதர் வேடம், மறுபக்கம் காவி வேடம். பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி என நான் அன்றே கூறியதை தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். இந்த தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திருட்டு வழக்கு, கொள்ளை வழக்கில் இருந்து காப்பாறிக் கொள்ள மோடி மற்றும் அமித் ஷா காலில் திமுக விழும்” எனத் தெரிவித்தார்.
Summary
The Final Campaign to Send the DMK Home! Vijay in Chennai!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் விஜய் சாலைவலம்!

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

சென்னையில் 3 தொகுதிகளில் விஜய் இன்று பிரசாரம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
