சென்னை தியாகராய நகரில் தவெக தலைவர் விஜய் நாளை(ஏப். 15) மேற்கொள்ள பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் காரைக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே ஏப். 9 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நேரக்கட்டுப்பாடு காரணமாக பேசாமல் சென்றுவிட்டார்.
ஏற்கெனவே வில்லிவாக்கம், அண்ணா நகர் தொகுதிகளில் போதிய பாதுகாப்பின்மை காரணமாக விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்திற்கு 1 மணி நேரம் மட்டுமே காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதால் சைதாப்பேட்டை பிரசாரத்தை தவெக முன்னதாக ரத்து செய்தது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகர், சைதாப்பேட்டையில் தவெக தலைவர் விஜய் நாளை பிரசாரம் செய்வதற்கான அனுமதியை காவல் துறை, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களிலும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, விஜய் நாளை பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
Summary
Permission has been granted for TVK leader Vijay to conduct a campaign tomorrow (April 15) in T. Nagar, Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?

சென்னை தி. நகரில் விஜய் சாலை வலம்!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


